×

காலாபாணி புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ராஜேந்திரனுக்கு பாரிவேந்தர் எம்.பி வாழ்த்து..!!

சென்னை: காலாபாணி புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ராஜேந்திரனுக்கு தமிழ் பேராயத்தின் புலவரனும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் நிறுவன வேந்தருமான பாரிவேந்தர் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், எஸ்.ஆர்.எம். தமிழ் பேராயத்தின் விருது பெற்ற படைப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பின்னர் சாகித்திய அகாடமி, செம்மொழி தமிழாய்வு, மத்திய நிறுவனம் மற்றும் தமிழக அரசின் விருதுகளை தொடர்ந்து பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தகுதியானவர்களுக்கு சரியான தேர்வு முறையில் தமிழ்ப்பேராயம் விருதுகள் வழங்குவதை இது உறுதிப்படுத்துகிறது என்றும் அந்த வகையில் 2017ம் ஆண்டு தமது அறிய படைப்பாகிய வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு என்ற புதினத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர் ராஜேந்திரன், தமது இன்னொரு சிறந்த படைப்பான காலாபானி என்ற புதினத்திற்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

அரசுப் பணியோடு அருந்தமிழ்ப் பணியையும் ஆற்றி அதற்கான அங்கீகாரமான விருது பெற்றிருக்கும் அவருக்கு தமிழ்ப்பேராயத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், பணி ஓய்வு காலத்திலும் அவரது எழுத்துப்பணி என்றும் தொடர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

Tags : Parivendar MP ,Sahitya Akademi ,Rajendran , Kalapani Pudinam, Sahitya Akademi Award, Parivendar MP Congratulations
× RELATED வயதான தம்பதியிடம் சேமிப்பு கணக்கு தொடங்க சொல்லி ரூ.3.70 கோடி மோசடி!